வெள்ளத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர்... சாமர்த்தியமாக மீட்ட  புதுமணப் பெண்... வைரல் வீடியோ! 

 

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கித் தத்தளித்த பைக் ஓட்டுநரைப் புதுமணப் பெண் ஒருவர் துப்பட்டாவைப் பயன்படுத்திப் பத்திரமாக மீட்டுள்ளார்.

📍 Chamba — A family travelling in their vehicle noticed a biker struggling for his life, stuck at the edge of the road with his bike, and immediately stepped in to help.

The video is reportedly from the Banikhet side.

The monsoon in the hills can turn dangerous within moments.… pic.twitter.com/Gp1JomReko

— The Modern Himachal (@themodernhp) August 31, 2026

சாம்பா மாவட்டத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த வெள்ள நீரில் நிலைதடுமாறிய பைக் ஓட்டுநர் நீரோட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்ததைக் காரில் சென்ற குடும்பத்தினர் கவனித்தனர்.

நிலைமை மோசமடைவதை உணர்ந்த காரில் இருந்த புதுமணப் பெண் சிறிதும் தாமதிக்காமல் தனது துப்பட்டாவை நீட்டி ஓட்டுநரைப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்த நிலையில், இவரது தைரியமான செயல் தற்போது இணையத்தில் பரவிப் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.