undefined

காவிரியில்  வெள்ளப்பெருக்கு...  அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை! 

 

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து பெரிதளவில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சின்னாறு அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் நீரின் அளவு அபூர்வமாக உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை வினாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை 65,000 கனஅடியாக உயர்ந்தது. இந்த நீர்வரத்து பிலிகுண்டுலு வழியாக தமிழக எல்லைக்குள் நுழைந்து ஒகேனக்கலை கடந்து வருகிறது. வெள்ளப்பெருக்கால், அருவிகள் செல்லும் நடைபாதைகள் வெள்ளத்தில் மூழ்குவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கத்தையும் தற்காலிகமாக தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் பிறப்பித்துள்ளார். அதனைச் தொடர்ந்து, முக்கிய நுழைவு வாயில்கள் மற்றும் பரிசல் துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?