முதல் முறையாக.. மகளிருக்கான இரவு நேர மாரத்தான்.. பெண்கள் உற்சாகம் !!

 

தமிழகத்தில் முதன்முறையாக இரவு நேரத்தில் பெண்களுக்கான மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐஜி அஜய்பரதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

3கி.மீட்டர், 5கி.மீட்டர் மற்றும் 10கி.மீட்டர் மற்றும் 21கி.மீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டி வ.உ.சி மைதானத்தில் துவங்கி ஆர்.டி.ஓ சாலை, ரேஸ் கோர்ஸ்,திருச்சி சாலை வரை சென்று மீண்டும் அதே இடத்தில் முடிவடைந்தது. இரண்டரை வயது குழந்தைகள் முதல் 97 வயது முதியோர்கள் வரையிலான  மாற்றுத்திறனாளிகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்  மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கான இந்த இரவு நேர மாரத்தான் போட்டி  நடத்தப்பட்டது.

மாரத்தான் போட்டியை நடத்திய ஜெம் அறக்கட்டளையானது பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்தது. மேலும் பகல், இரவு எனஎந்த நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெண்கள் நடமாட ஒரு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக கொண்டது.