125 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை... ஆஸ்திரேலிய ராணுவத்தில் பெண் தளபதி!

 

ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத புதிய திருப்பமாக, முதல் முறையாக ஒரு பெண் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

55 வயதான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல், 1987-ல் ராணுவத்தில் சாதாரண வீரராகச் சேர்ந்தவர். தற்போது 'கூட்டுத் திறன்களுக்கான' தலைவராக இருக்கும் இவர், ஜூலை மாதம் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை 2030-க்குள் 25 சதவீதமாக உயர்த்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இப்போது ஆஸ்திரேலிய ராணுவத்தில் 21% பெண்களும், உயர் பொறுப்புகளில் 18.5% பெண்களும் உள்ளனர். சூசனின் நியமனம் இந்த இலக்கை எட்ட வைக்கும் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' ஆகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத் தேர்தலில் 46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை என்ற செய்தி ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் ராணுவத்தையே ஒரு பெண்ணின் கையில் ஒப்படைக்கும் இந்தச் செய்தி 'சம உரிமை' குறித்த விவாதத்தை உலக அளவில் சூடுபடுத்தியுள்ளது!