ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்க...  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் செங்கோட்டையன்! 

 
 

 

அதிமுக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மு. அப்பாவுக்கு நேரில் கடிதம் ஒப்படைத்தார். சில நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு மீறல் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவரை அதிமுகவிலிருந்து நீக்கியதை அடுத்து, செங்கோட்டையன் எந்த நேரத்திலும் ஒரு தீவிர முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது; அதேபோல் இன்று அவர் MLA பதவியையும் துறந்துவிட்டார்.

ராஜினாமாவிற்கு பின் செய்தியாளர்கள் “விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் சேரப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு புன்னகையுடன் — “இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்!” — என சுருக்கமான பதில் அளித்தார். இந்த ஒரே வாக்கியம் அரசியல் வட்டாரத்தை தீவிர அதிர்வு அடையச் செய்துள்ளது. ஏற்கனவே தவெக அணியில் செங்கோட்டையனுக்கு வரவேற்பு என்ற தகவல்கள் பரவியிருந்த நிலையில், இந்த பதில் அந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

செங்கோட்டையன் நாளை அல்லது விரைவில் விஜயை நேரில் சந்தித்து த.வெ.கவில் அதிகாரப்பூர்வமாக இணையலாம் என எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதிமுகவிலிருந்து நீக்கம் — MLA பதவி ராஜினாமா — தற்போது புதிய கட்சி இணைவு என தொடரும் இவரது அடுத்த அரசியல் அடி, தமிழக அரசியலின் கவனம் முழுவதையும் தன்னிடம் ஈர்த்துள்ளது. காத்திருக்கிறது அரசியல் அரங்கம்; அடுத்த 24 மணி நேரமே மிக முக்கியம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!