அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் - திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு!
Sep 10, 2026, 08:10 IST
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த வழக்கில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம், முன்னாள் எம்.பி. ஜெகநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெகநாதன், கடந்த 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.