வங்கதேச முன்னாள் பிரதமர் மகள் பதவி விலகல்; பிராந்திய இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்!

 

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநருமான சைமா வாசித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த 2024-ல் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை இழந்த நிலையில், தற்போது அவரது மகள் சைமா வாசித்தும் உலக சுகாதார அமைப்பின் முக்கியப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

முன்னதாக சீனா பயணத்தின்போது நிதி மோசடி மற்றும் போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்ததாக அவர் மீது ஐ.நா. மற்றும் வங்கதேச அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தன.

கடந்த ஒரு ஆண்டாகச் சம்பளமில்லா விடுப்பில் இருந்து வந்த அவர், தற்போதைய தலைமை மீது நம்பிக்கை இழந்து விட்டதாகக் குறிப்பிட்டுத் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.