சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வரராவ் சர்வஜன் சனாதன கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பு!

 

சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான நாகேஸ்வரராவ், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சர்வஜன் சனாதன கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

1986-ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், காவல்துறையிலும் சிபிஐயிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, 2018 முதல் 2019 வரை சிபிஐ இடைக்கால இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பணிக்காலம் ஓய்வுக்குப் பிறகு தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் தனது கட்சியின் மூலமாகப் போட்டியிட உள்ளார்.