வருமானத்தை மறைத்த வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!
Aug 7, 2026, 18:50 IST
வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது சகோதரரின் நிறுவனத்தில் கே.என்.நேரு செய்த ரூ.11 கோடி முதலீட்டை முறைப்படி கணக்கில் காட்டவில்லை. மேலும், அவருக்குக் கிடைத்த ரூ.17 கோடி வருவாயையும் கணக்கில் காட்டத் தவறிவிட்டதாகக் கூறி வருமான வரித்துறை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது.
வருமான வரித்துறை தொடர்ந்த இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் உரிய விளக்கம் அளித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.