இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார் - நாளை மாலை இறுதி ஊர்வலம்!

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்தின் தந்தையும், எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மண்டல மேலாளருமான வி. சாந்தகுமாரன் நாயர் (89) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று இரவு 9:45 மணியளவில் பிரிந்தது. அவரது உடல் சொந்த ஊரான கோதமங்கலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. சாந்தகுமாரன் நாயரின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்குத் திட்டமிடப்பட்டு நடைபெற உள்ளன.