ரிசர்வ் வங்கியின் நிர்வாக வாரிய இயக்குநராக இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் நியமனம்!

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான எஸ்.சோமநாத், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக வாரியத்தில் பகுதிநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.சோமநாத் ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக வாரிய இயக்குநராக 4 ஆண்டுகள் பதவி வகிப்பார். இந்த நியமனம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய இவர், தற்போது பெங்களூரு சாணக்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் (Chancellor) பொறுப்பு வகித்து வருகிறார்.

பிரபல தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவின் பதவிக்காலமும் ரிசர்வ் வங்கி வாரியத்தில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.