சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்.. !
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 13) காலமானார். அவருக்கு வயது 71.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிறந்தவர் சி.எஸ்.கர்ணன். வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றினார்.
நீதித்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் சி.எஸ்.கர்ணன். குறிப்பாக, அவரது நீதித்துறை நடவடிக்கைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது. அவரது மறைவு நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.