முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தவெகவில் மண்டல பொறுப்பு!

 

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவிக்கு பதிலாக, டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அவருக்கு 'மண்டல பொறுப்பாளர்' பதவி வழங்கப்படும் எனத் தவெக தலைமை உறுதியளித்துள்ளது.

நடைபெறவுள்ள விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் தவெக சார்பில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பொறுப்பு மற்றும் கட்சித் தலைமையின் வாக்குறுதியால் உற்சாகமடைந்துள்ள விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தொகுதியில் தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார்.