முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் இளைய மகனைக் கொன்றுவிட்டு மூத்த மகன் தப்பியோட்டம் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் சொத்துத் தகராறு காரணமாக மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மூத்த மகன், தனது தம்பியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களான ராஜபாண்டி மற்றும் ராஜராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துத் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த மூத்த மகன் ராஜபாண்டி தனது தம்பி ராஜராஜனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணன் ராஜபாண்டி உடனடியாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள ராஜபாண்டியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.