இன்று தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்... லிஸ்ட் இதோ!
Aug 1, 2026, 18:00 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சித் தலைமை நிலைய அலுவலகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி வந்த முக்கியத் தலைவர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்:
எம். உதயகுமார் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), கே.எஸ். சீனிவாசன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.), டாக்டர் மாலா - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தவிர, மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் தவெகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.