சுவீடன் தேர்தலில் முன்னாள் பிரதமர் மக்டலினா பெரும்பான்மையுடன் வெற்றி... ஆட்சியைப் பிடிக்கிறார்!
ஐரோப்பிய நாடான சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
சுவீடனில் உள்ள மொத்தம் 349 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தற்போதைய பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட்டணி 173 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது.
முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றித் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தேர்தல் தோல்வியை அடுத்து, சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான வழிவகை செய்யும் வகையில், தனது ராஜினாமா கடிதத்தை அவர் நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.