முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!
Updated: Sep 17, 2026, 11:28 IST
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் (79), சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக இன்று (செப்.17) காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக பணியாற்றிய சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
சட்டப் படிப்பை முடித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.சுதர்சன நாச்சியப்பனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.