FQL ஆன்லைன் செயலி மோசடி வழக்கு: 4-வது நபர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
FQL ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ. 30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இச்சம்பவத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கோடு தொடர்புடைய 4-வது நபரும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆன்லைன் மோசடியில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை முழுமையாக இழந்த காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தேடும் பணியும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணையும் காவல்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.