பிஎஃப் கணக்கு ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு!

 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்துள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள 'இடிஎல்ஐ' எனப்படும் ஊழியர்களின் வைப்பு நிதி இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இபிஎப்ஓ அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 'இடிஎல்ஐ' திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பணிபுரியும் காலத்தில் எதிர்பாராதவிதமாக ஊழியர் மரணமடைய நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு அல்லது வாரிசுதாரருக்கு இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும். இதன் மூலம் துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்தத் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊழியர்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்து தனியாக எந்தவொரு பிரீமியம் தொகையையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

காப்பீட்டுத் தொகையானது ஊழியரின் கடைசி 12 மாத ஊதியம் மற்றும் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுத் தகுதியான வாரிசுதாரருக்கு வரவு வைக்கப்படுகிறது.