மகளிர், இளைஞர்களுக்கு நிதியுதவி தொடங்கி விவசாயிகள், நெசவாளிகள் வரை.... எகிறும் எதிர்பார்ப்பு - இன்று மாலை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை இiன்று ஏப்ரல் 16ம் தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இந்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே பிரச்சாரக் கூட்டங்களில் விஜய் அறிவித்த திட்டங்களின் அடிப்படையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களுக்கான திட்டங்கள்:
29 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டிற்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்.
விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்:
5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ₹4,500 விலை நிர்ணயம்.
நெசவாளர்களுக்கு:
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ₹30,000 நிதியுதவி மற்றும் இலவச மின்சாரம் அதிகரிப்பு.
காவல்துறையினருக்கு:
காவலர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹25,000 ஆக உயர்வு மற்றும் வார விடுமுறையை உறுதி செய்யும் 'காவலர் நலச் சட்டம்'.
பொதுமக்களுக்கு:
ஊழலற்ற நிர்வாகம், மகளிருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மற்றும் கல்வி-மருத்துவச் சீர்திருத்தங்கள்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்படி 800 நிர்வாகிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு, QR code அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நேரலையில் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.