தங்கம் முதல் வெண்கலம் வரை... காமன்வெல்த்தில் இந்தியாவின் வெற்றிப் பயணம்... முழு பதக்க பட்டியல்!
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இத்தொடரில் இந்திய குத்துச்சண்டை அணி ஒரே காமன்வெல்த் பதிப்பில் 7 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டியது. பளுதூக்குதல் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற மீராபாய் சானு, தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
குல்வீர் சிங், ஒரே காமன்வெல்த் தொடரில் டிராக் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் தேஜஸ்வின் சங்கர், காமன்வெல்த் டெகாத்லான் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரராக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றார்.
குத்துச்சண்டை (10 பதக்கங்கள்)
பிரீதி பவார் (54 கிலோ), ஜெயிஸ்மின் லம்போரியா (57 கிலோ), சாக்சி சவுத்ரி (51 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (70 கிலோ), சச்சின் சிவக் (60 கிலோ), அங்குஷ் பங்கால் (80 கிலோ) என 7 தங்கப் பதக்கங்கள்.
வெள்ளி (3): ஜடுமணி சிங் (55 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), நரேந்தர் பெர்வால் (+90 கிலோ).
பளுதூக்குதல் (8 பதக்கங்கள்)
தங்கம் (1): மீராபாய் சானு (48 கிலோ).
வெள்ளி (6): ரிஷிகாந்த் சிங், முத்துப்பாண்டி ராஜா, ஞானேஸ்வரி யாதவ், வல்லூரி அஜய் பாபு, ஹர்ஜிந்தர் கவுர், லவ்ப்ரீத் சிங்.
வெண்கலம் (1): பிந்த்யாராணி தேவி.
தடகளம் மற்றும் பாரா தடகளம் (16 பதக்கங்கள்)
தங்கம் (3): ஷர்மிளா தங்கர், திலீப் காவித், சோமன் ராணா.
வெள்ளி (7): சர்வேஷ் குஷாரே, குல்வீர் சிங் (10,000 மீ), முரளி ஸ்ரீசங்கர், முகமது பாசில், நீரஜ் சோப்ரா, பிரவீன் சித்ரவேல், சுபம் ஜூயல்.
வெண்கலம் (6): ஷில்பா கே. ஷைலா, சீமா கலிராம்னா, தேஜஸ்வின் சங்கர், யாஷ் வீர் சிங், செல்வா பிரபு, குல்வீர் சிங் (5,000 மீ).
ஜூடோ (4 பதக்கங்கள்)
தங்கம் (2): அஸ்மிதா டே (மகளிர் -48 கிலோ), ஹர்ஷ் சிங் (ஆடவர் -60 கிலோ).
வெள்ளி (1): யாமினி மவுர்யா (மகளிர் -57 கிலோ).
வெண்கலம் (1): உன்னதி சர்மா (மகளிர் -63 கிலோ).
பாரா பவர்லிஃப்டிங் (1 பதக்கம்)
வெண்கலம் (1): ஜான்டு குமார் (ஆடவர் ஹெவிவெயிட்).
சர்வதேச அரங்கில் குத்துச்சண்டை, தடகளம் மற்றும் பளுதூக்குதல் பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆதிக்கம், உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சியை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.