அஜீரணம் முதல் நுரையீரல் பலம் வரை.. தினமும் 1 ஸ்பூன் போதும்... பலம் தரும் திரிகடுகு சூரணம்!

 

சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று மருத்துவ மூலிகைகள் சம அளவில் கலந்த கலவையே 'திரிகடுகு' ஆகும். இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய வலி நிவாரணியாகவும், செரிமான ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுக்கு வயிற்றில் சுரக்கும் நொதிகளைச் சீராக்கி, அஜீரணம், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கிறது. விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சல் மற்றும் பல்வேறு உடல் வலிகளுக்குத் திரிகடுகைச் சாறாகவோ அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்தோ உட்கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும்.

நெஞ்சு சளி, இருமல், ஜலதோஷம் மற்றும் இரைப்பு (ஆஸ்துமா) போன்ற கபம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்த்து, நுரையீரலின் உயிர் சக்தியையும் செயல்திறனையும் கூட்டுகிறது. தொண்டைக்கட்டு, தொண்டைப் புண் மற்றும் காது-மூக்கு தொடர்பான கோளாறுகளைத் திப்பிலி கட்டுப்படுத்துகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தி, தோல் நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் சார்ந்த தொந்தரவுகளுக்குத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது. இன உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், ஆண்களுக்கு ஏற்படும் விந்தடைப்பு சார்ந்த கோளாறுகளை நீக்கவும் இது பயன்படுகிறது.