undefined

அக்டோபர் 31 முதல் ராசராச சோழன் 1040-ஆம் ஆண்டு சதய விழா!

 

மாமன்னன் ராசராச சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்டோபர் 31 முதல் இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராசராச சோழன் முடிசூட்டிய தினமான ஐப்பசி சதய நாளை ஒட்டி, ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை சதய விழாக் குழு மிகுந்த ஏற்பாடுகளுடன் நடத்துகிறது.

அக்டோபர் 31 அன்று காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ராமச்சந்திரன் உரையாற்றுகிறார். மதியம் கருத்தரங்கம், பிற்பகல் கலைநிகழ்ச்சிகள், மாலை 5.30 மணிக்கு கவியரங்கம், 6.30 மணிக்கு 1040 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு வில்லுப்பாட்டு மற்றும் வரலாற்று நாடகம் நடைபெறும்.

நவம்பர் 1 அன்று காலை ராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு நடைபெறும். பின்னர் திருமுறை உலா, பேரபிஷேகம், கலைநிகழ்ச்சிகள், மாலை சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறும். இரவு 7 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் சிறப்புரையாற்றும் விருது வழங்கும் விழா நடைபெறும். இதையடுத்து பட்டிமன்றமும், பாடகர்கள் செந்தில்–ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!