பெற்றோர்களே உஷார்... பிரபல ப்ரூட்டி ஜூஸ் பாக்கெட்டில்  மங்கலான கருப்பு நிற திரவம் ... பகீர் வீடியோ! 

 

 

சாமானிய பொதுமக்களும், முக்கியமாகக் குழந்தைகளும் கோடை வெயிலுக்குக் குளு குளுவென விரும்பி குடிக்கும் ‘புரூட்டி’ (Frooti) மாம்பழ ஜூஸ் பாக்கெட் ஒன்றிற்குள் விசித்திரமான கருப்பு நிறத் திரவம் இருந்த அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே மாபெரும் பகீரையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.தாய் ஒருவர் தனது குழந்தைக்குக் கொடுப்பதற்காகப் புரூட்டி டெட்ரா பேக் (  ஜூஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். வழக்கமாக ஸ்ட்ரா (Straw) போட்டு குடிக்கும் அந்தப் பாக்கெட்டை, ஏதோ ஒரு சந்தேகத்தில் அவர் கத்தரிக்கோலால் மேல் பகுதியை முற்றிலுமாக வெட்டித் திறந்துள்ளார். அப்போது அந்த ஜூஸ் பாக்கெட்டின் உள்ளே, மஞ்சள் நிற மாம்பழச் சாற்றுக்குப் பதிலாக, பார்ப்பதற்கே அருவருப்பான முறையில் அடர்ந்த கருப்பு நிறத்தில் ஒரு மர்மத் திரவமும், அடியில் ஏதோ படிவங்களும் படிந்திருந்ததைக் கண்டு அந்தத் தாய் நிலை குலைந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான பகீர் வீடியோ தற்பொழுது நெட்டிசன்களிடையே காட்டுத்தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அதில் சேர்க்கப்படும் பதப்படுத்திகளின்   ஆயுட்காலம் எந்தளவுக்குப் பாதுகாப்பானது என்ற அச்சம் இதன் மூலம் சாமானிய மக்களிடையே மீண்டும் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தற்பொழுது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.