ஊட்டியில் கொட்டும் உறைபனி ... சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
Dec 24, 2025, 11:35 IST
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் குளிர்காலம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள் முழுவதும் வெள்ளை போர்வை போல் காட்சி தருகிறது.
வாகனங்களின் மேல் கூட உறைபனி படிந்துள்ளது. காலை வெயில் வந்தும் உறை பனி ஆவியாகாமல் காட்சியளிக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி, பொதுமக்கள் கம்பளி ஆடைகள் அணிந்து வருகிறார்கள்.
உறைபனியை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு குவிந்து வருவதால் வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக காட்சி பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.