விநாயகர் சதுர்த்தி.. அனைத்து சிலை பந்தல்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க ஆந்திர அரசு உத்தரவு!
Sep 10, 2026, 07:30 IST
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்படும் அனைத்து விநாயகர் சிலை பந்தல்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விழாக்குழுவினருக்கு ஏற்படும் அதிகப்படியான நிதிச் சுமையை பெருமளவில் குறைப்பதோடு, பொதுமக்கள் எந்தவிதச் சிரமமுமின்றித் தடையின்றிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆந்திர அரசு இச்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பந்தல்களுக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குவதற்காக மின்வாரியத் துறையும் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.