ஆண்டுக்கு 3  இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்... முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு!

 

 

 

தமிழக இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத் தொகை தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்தத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் குடும்பச் சுமை குறையும் என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.