“மலையூரு நாட்டாம... மனசைக் காட்டு பூட்டாமா...” தினமும் ஒரு Reels வீடியோ... ஜெம் வீரமணி தோழி சாந்தியின் நடன வீடியோக்கள் வைரல்!
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் தொடர்புடையவர் என செய்திகள் வெளியாகியுள்ள சாந்தி முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்ட நடன ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
சாந்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு திரைப்படப் பாடல்களுக்கு ஏற்ற வகையில் உடைகள் மற்றும் கெட்-அப்களை மாற்றி நடனமாடியிருப்பது அவரது ரீல்ஸ் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளது.
பழைய திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, சமீபத்திய திரைப்படப் பாடல்களுக்கும் சாந்தி நடனமாடியுள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படப் பாடல்களுக்கு அந்த காலகட்ட கெட்-அப்பில் தோன்றியுள்ள அவர், சரோஜாதேவி, ஜெயலலிதா உள்ளிட்ட நடிகைகளின் நடன பாணியைப் பின்பற்றியும் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜாலி ஓ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்களுக்கும் சாந்தி நடனமாடியுள்ளார். நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உடைகள் மற்றும் தோற்றங்களில் அவர் ரீல்ஸ் வெளியிட்டதாகவும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
இதனிடையே, ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் சாந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதால், அவர் முன்பு வெளியிட்டிருந்த சமூக வலைதள பதிவுகள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக சாந்தி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற விசாரணை மற்றும் போலீஸ் விசாரணையின் முடிவுகளே இறுதியானதாகும்.