720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்... ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு

 

 

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு வழக்குக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வீரமணி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அளித்த புகார்களின் அடிப்படையில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஒரு வழக்கில் சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 40 சாட்சிகளின் விவரங்களுடன் சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் 11-ம் தேதி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.