undefined

திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்... ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த போலீஸ்காரர்!

 

விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட காவலர் சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணிடம் நெருக்கமானார்.

ஆமத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35), அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது, அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, கடந்த சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணிடமிருந்து சிறுகச் சிறுக சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார்.

பெண்ணின் மகளை மருத்துவப் படிப்புக்குச் சேர்க்க உதவுவதாகக் கூறியும் பலமுறை பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அந்தப் பெண்ணுக்குச் சுந்தர்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சுந்தர்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, கடந்த 2025 நவம்பர் மாதம் முதலே சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.