undefined

ரெண்டு நாளில் திருமணம்... புதுமாப்பிள்ளை தற்கொலை... கதறிய உறவினர்கள்!

 

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் அடுத்த 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென தூக்கிடு தற்காெலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர், உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் ஏ.எம். பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் மெய்யப்ப போஸ் (25). இவர் மேலமருதூரில் தனியாருக்கு சொந்தமான பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நாளை பிப்ரவரி 3ம் தேதி திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

இந்நிலையில், மெய்யப்ப போஸ் நேற்றிரவு பணி முடித்து விட்டு இன்று காலை 6:30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் புதிதாக கட்டியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரது பாட்டி பேச்சியம்மாள் காலை 8:30 மணி அளவில் அவரை சாப்பிட அழைக்க சென்ற போது மெய்யப்ப போஸ் மின்விசிறி மாட்டக்கூடிய கொக்கியில் நைலான் கயிற்றினால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். 

இதனையறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக திருமணத்திற்காக குழுமியிருந்த உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பதறியடித்தப்படி கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். புதுமாப்பிள்ளையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!