"MLA-க்களை வாங்கத் தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?" - உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!

 

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் அழுகிய நிலையிலும் தரமற்றும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து முறையான ஆய்வுகள் இன்றி 450 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் வந்திறங்கிய இந்த வெங்காயம் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால், கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளது.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தவறான தகவல்களைப் பரப்பி அரசு தப்பிக்கப் பார்க்கிறது.

அழுகிய வெங்காயத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்யத் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு லாரியில் அனுப்பியுள்ளனர். ஆனால், அங்குள்ள வணிகர்கள் தரமற்ற வெங்காயத்தைப் பார்க்காமல் வாங்க முடியாது என மறுத்துவிட்டனர்.

ரேஷன் கடைகளில் ₹30-க்கு பொன்னி அரிசி வழங்குவதாகக் கூறிவிட்டு, டெண்டர் விடாமல் வழக்கமான அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வது குறித்து எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

வெங்காய விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி இடைத்தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தனது எக்ஸ் தளத்தில் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.