பள்ளிப் பேருந்து மோதி பெண் குழந்தை பலி; கள்ளக்குறிச்சியில் சோகம்!
Nov 4, 2026, 07:40 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி கிராமத்தில் தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடராஜன் என்பவரின் ஒன்றரை வயது மகள் நிரஞ்சனா, நேற்று அவ்வழியாக வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த் அவிபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
குழந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் கிராம மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.