ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 16 வயது சிறுமி... மீட்பு பணிகள் தீவிரம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ரக்ஷா பந்தன் விழாவையொட்டித் தனது சகோதரனுக்கு ராக்கி கட்டச் சென்ற 16 வயது சிறுமி சித்கி சர்மா மூடப்பட்டிருந்த 20 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழா கொண்டாட வேண்டிய நன்னாளில் நிகழ்ந்த இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மீட்புக் குழுவினர் நவீன உபகரணங்களின் உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இருக்கும் சிறுமியைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப் போராடி வருகின்றனர். சிறுமி விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அதிக அளவில் கூடிள்ளதால் அங்குப் பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிறுமி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இது போன்ற ஆபத்தான திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றுக் குழாய்களை முறையாக மூடாதது குறித்துக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற விபத்துகள் இனிமேல் எங்கும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்புகளைச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சிறுமியை மீட்கும் நடவடிக்கை விரைவில் வெற்றிகரமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது