கூட்டுபலாத்காரம் செய்து சிறுமி படுகொலை; உடலைக் நாய்கள் கடித்துக் குதறிய கொடூரம்!
டெல்லி சுவரூப்நகர் பகுதியில் நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி சுவரூப்நகர் வயல்வெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் ஒன்று கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளது. மேலும், அந்த உடலைத் தெருநாய்கள் கடித்துக் குதறிய கோரமான நிலையில் சிறுமியின் சடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவற்றின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால், சம்பவம் நடந்து 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், சிறுமியின் காதலன் மற்றும் சிவம் (19) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அச்சிறுமியைக் கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. நடந்த கொடுமையை சிறுமி வெளியே சொல்லிவிடுவாள் என்ற அச்சத்தில் அவர்கள் சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.