“விடுதியில் அடைக்கப்பட்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... 'விஜய் மாமா’ எங்கே போனார்?' - கனிமொழி ஆவேசம்!
தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி, மாநில அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாகக் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி, தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு அதிர்ச்சிச் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார்: செஞ்சியில் மாயமான 7 வயதுச் சிறுமியை 14 நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேளாங்கண்ணிக்குச் சென்ற இரு சிறுமிகள் விடுதியில் அடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறான். கோவையில் சாதிய வன்கொடுமை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பலனின்றி 4 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இத்தகைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய கனிமொழி எம்பி, "தமிழ்நாடு அனைத்து வழிகளிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறிவிட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் "தேர்தலின் போது குழந்தைகளைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்து, அவர்களை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 'விஜய் மாமா' இப்போது எங்கே போனார்?" எனக் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த அறிக்கை தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.