ஆடுகளை மேய்ப்பதற்கு லட்சக்கணக்கில் சம்பளம்... சீனாவில் கெத்து காட்டும் பண்ணையாளர்! 

 

சீனாவைச் சேர்ந்த ஜுவோ சியாங் என்பவர் மங்கோலிய எல்லையின் தெற்குப் பகுதியில் சொந்தமாக ஒரு பெரிய பண்ணை வைத்துள்ளார். அவரது பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சுமார் 3000 ஆடுகளை நல்ல முறையில் மேய்ப்பதற்கு ஆட்கள் தேவை என அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த வேலைக்குத் தகுதியானவர்களுக்கு லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

allowfullscreen

ஆடு மேய்க்கும் இந்த வேலைக்காக லட்சத்தில் சம்பளம் தரப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த 700-க்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் அந்தப் பண்ணையாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்துள்ளனர். பண்ணைக்கு வந்த அத்தனை விண்ணப்பங்களையும் ஜுவோ சியாங் மிகத் துல்லியமாகப் பரிசீலனை செய்துள்ளார். இறுதியாக, ஆடு வளர்ப்பிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் ஏற்கனவே நல்ல முன் அனுபவம் கொண்ட இரு தம்பதிகளை மட்டும் அவர் இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

குறிப்பாகக் கோடைகாலத்தில் ஆடுகளைத் தகுந்த புல்வெளிகளுக்குக் கூட்டிச் சென்று மேய்ப்பது இவர்களின் முக்கிய பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆடு மேய்க்கும் சாதாரண வேலைக்குக் கூட ஒரு தொழிலதிபர் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்க முன்வந்த இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரு தம்பதிகளும் விரைவில் பண்ணையில் தங்களின் பணியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.