கோபி அருகே சோகம்! அறுந்த மின்கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் பலி!

 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மனோஜ் (16) என்ற சிறுவன், அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

 

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த மனோஜை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பி எப்படி அறுந்து விழுந்தது, மின்சாரம் தொடர்ந்து பாய்ந்ததற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.