கோகுலாஷ்டமி.. குட்டி கிருஷ்ணரை வீட்டிற்கு வரவேற்பது எப்படி? - வழிபாட்டு முறைகள்!

 

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மனித குலத்தில் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய மிக முக்கியமான நாள்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தியாகும். கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, அஷ்டமி ரோகிணி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இப்பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நன்னாளில், அதர்மத்தை அழிக்கப் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணர் அவதரித்தது இரவு நேரம் என்பதால், மாலை மற்றும் இரவு வேளைகளில் இந்த வழிபாடுகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/rbOo4T0kOxQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/rbOo4T0kOxQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி வாசலில் அழகிய கோலமிட வேண்டும். அந்தக் கோலத்தில் கண்ணனின் சின்னச் சின்ன பாதங்களை வீட்டுக்குள் வருவது போல் வரைந்து, குட்டி கிருஷ்ணரை அன்போடு வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

மற்ற பண்டிகைகளைப் போலன்றி, கிருஷ்ண ஜெயந்திக்கு விதவிதமான பலகாரங்கள் செய்து படைக்க வேண்டும். குறிப்பாக, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய் மற்றும் இனிப்புப் பண்டங்கள் நைவேத்தியத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

மகிழ்ச்சி மற்றும் அன்பின் வடிவமாகக் கருதப்படும் கிருஷ்ணரை இந்த நன்னாளில் மனதார வழிபட்டால் வாழ்வில் எத்தகைய வெற்றிகளையும் நன்மைகளையும் பெறலாம். குறிப்பாக, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கண்ணனை மனமுருகி வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.