undefined

தங்கம் விலை புதிய உச்சம் - சவரன் ₹1,26,000-ஐத் தாண்டியது!

 

நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ₹5,200 வரை உயர்ந்த நிலையில், இன்றும் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 

ஆபரணத் தங்கம் (22 கேரட்)  ஒரு சவரன் தங்கம் நேற்று ₹1,24,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹1,800 உயர்ந்து ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ₹15,550-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹225 உயர்ந்து ₹15,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட்  ஒரு கிராம் தூய தங்கம் இன்று ₹17,209-க்கு விற்பனை செய்யப்படுகிறது (நேற்று ₹16,964). ஒரு சவரன் தூய தங்கம் இன்று ₹1,37,672 ஆக உள்ளது.

சென்னையில் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹5 உயர்ந்து ₹325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி இன்று ₹3,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது (நேற்று ₹3,20,000).

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் இந்தத் திடுக்கிடும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கித் திருப்பியுள்ளது.

நேற்று ஒரே நாளில் ₹5,200 உயர்ந்தது தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒருநாள் விலை உயர்வாகக் கருதப்படுகிறது. திருமண சீசன் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் தங்கம் விலை இவ்வாறு தாறுமாறாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.