இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

சர்வதேசப் பொருளாதார நிலவரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் போர் பதற்றம்: அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்ததால், சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை நீடிக்கிறது.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்து, தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

ஒரு கிராம் நேற்று ரூ.13,300-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று ரூ.1,06,400-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம்: ரூ.240. ஒரு கிலோ பார் வெள்ளி: ரூ.2,40,000

கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம் (சவரன் கணக்கில்) ஜூலை 26: ரூ.1,05,840, ஜூலை 25: ரூ.1,05,840, ஜூலை 24: ரூ.1,05,840, ஜூலை 23: ரூ.1,08,000, ஜூலை 22: ரூ.1,07,440 என விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்து வருவது நுகர்வோர்கள் மற்றும் நகை பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.