தங்கம் விலை சவரன் ரூ.90,000யை நெருங்கியது... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
ஜெட் வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியளித்தது. சவரன் ரூ.90,000யை நெருங்கியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டு விடும் வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை இன்று அக்டோபர் 7ம் தேதி மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,200-க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89600-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.165000க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.167-க்கும், ரூ.2,000 அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலே, அதாவது கிராம் ரூ.167-க்கும், கிலோ ரூ.1,67,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!