தங்கம் விலையில் ஒரே நாளில் சவரன் ரூ.1,600 உயர்வு!

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளதால், நகை வாங்குவோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,15,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை தேவை காரணமாக ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.10,000 உயர்ந்து, ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.