இன்றும் தங்கம் விலை உயர்வு; 9 நாட்களில் ₹5,920 அதிகரிப்பு!
Aug 13, 2026, 11:00 IST
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது.
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹14,220-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹160 உயர்ந்து ₹1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹14,200-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹113,600-க்கும் விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹1,07,840-க்கு விற்பனையான நிலையில், கடந்த 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹5,920 வரை விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை இடைவிடாமல் தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரிடையேயும் பொதுமக்களடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.