தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 வரை சரிவு!

 

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.215 குறைந்து ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டபோதிலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகிறது