தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து விற்பனை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
Sep 28, 2026, 10:10 IST
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று திடீரென கணிசமாகக் குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்ற நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245-க்கு விற்கப்படுகிறது.