தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு - மேலும் குறைய வாய்ப்பு!
Sep 14, 2026, 10:50 IST
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை தொடர்கிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் வழக்கம் போல் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.