தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.400 குறைவு... ஒரே நாளில் ரூ.1,600 சரிவு!

 

சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் காரணமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை மற்றும் மதியம் என இரண்டு முறை குறைந்து, மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளது.

இன்று காலை வர்த்தகத்தின் போதே தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், மாலையில் மேலும் குறைந்து அதிர்ச்சியளித்துள்ளது: மதிய நிலவரம் (தற்போதைய விலை) ஒரு கிராம் தங்கம் ₹13,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு கிராம் ₹13,950-க்கும், ஒரு சவரன் ₹1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ₹1,600 குறைந்துள்ளது. இது சமீபத்திய நாட்களில் பதிவான மிகப்பெரிய ஒரு நாள் சரிவாகும்.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கிராம் ₹5 குறைந்து ₹260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோ ₹5,000 சரிந்து, தற்போது ₹2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த பதற்றம் சற்றே தணிந்திருப்பது மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்றவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்துள்ளன. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.