சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு.. மேலும் எவ்வளவு சரியும்?!

 

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தமிழக நகை சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 32 டாலர் சரிந்து 4,701 டாலராக விற்பனையாவதால், உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

சர்வதேச மந்தநிலையைத் தொடர்ந்து, சென்னையில் தங்கம் விலை சுமார் கிராமுக்கு ரூ.100 முதல் ரூ.110 வரை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 3 டாலர் சரிந்து 75 டாலராக உள்ள நிலையில், சென்னையிலும் அதன் விலை குறைந்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சர்வதேச அளவில் தங்கம் விலை மந்தமாகவே உள்ளது. இதனால் நேற்று சவரனுக்கு ரூ.720 குறைந்த நிலையில், இன்றும் அதே போன்ற சரிவு நீடிக்கிறது. வரும் நாட்களில் சர்வதேச பொருளாதாரத் தரவுகள் மற்றும் டாலரின் மதிப்பு அடிப்படையில் விலையில் மேலும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.