சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு - மேலும் குறையவே வாய்ப்பு!
Sep 2, 2026, 08:15 IST
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $140.46 வரை சரிந்து $4,289.73 ஆகவும், வெள்ளி $2.85 சரிந்து $63.04 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றச் சூழல் மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 14,175-க்கும், ஒரு சவரன் ரூ. 1,13,400-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்றைய சர்வதேச விலை வீழ்ச்சியின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.